Kogilavani / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
துவாரக்ஷான்
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்திச் செல்லும் டயகம ஆகுரோயா ஆற்றில், அதிகளவு குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் எனவே கழிவுகளை அகற்றுவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லிந்துலை பிரதேசத்துக்கு உட்பட்ட டயகம, அக்கரப்பத்தனை பிரதேசத்தில் வாழும் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், இந்த ஆற்று நீரை அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் விவசாயத்துக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
மன்றாசி, அக்கரப்பத்தனை போன்ற நகரங்களில் உள்ள குப்பைகள் இந்த ஆற்றில் கலக்கப்படுவதால், பல இடங்களில் குப்பைகள் தேங்கி நிற்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இதனால் ஆற்றநீர் மாசடைந்துள்ளது.
அத்துடன், ஆற்றின் இருமருங்கிலும் மூங்கில்கள் சரிந்து விழுந்துள்ளதால், மூங்கில்களில் குப்பைகள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, ஆற்றை சுத்திகரிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago