Kogilavani / 2021 ஏப்ரல் 11 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், துவாரக்ஷான்
அக்கரப்பத்தனை கிளாஸ்கோ ஆக்ரோவா தோட்டத்துக்குச் செல்லும் பிரதான பாலம், 38.94 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு மக்களின் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டது.
இப்பாலத்தின் திறப்பு விழாவில், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் குமாரவேல் தொண்டமான் பிரதம அதிதயாகக் கலந்துகொண்டு பொதுமக்களின் பாவனைக்கு பாலத்தைக் கையளித்தார்.
மேற்படித் தோட்ட மக்கள், மிக நீண்ட காலமாக பழைய பாலத்தின் ஊடாக தமது போக்குவரத்துப் பிரச்சினையை எதிர்கொண்டிருந்த நிலையில், அம்மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் ஜனாதிபதியின் ஆயிரம் பாலங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஊடாக, இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், பிலிப்குமார், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கதிர்செல்வன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago