Editorial / 2020 மே 20 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில், சுகாதார தரப்பினரால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைகளை மீறி, தலவாக்கலை நகரில் மிகவும் இரகசியமான முறையில் பிரத்தியேக வகுப்பை நடத்திய ஆசிரியர்கள் இருவர் உள்ளிட்ட மாணவர்கள் 14 பேரை, பொதுசுகாதாரப் பரிசோகர்கள் பொறுப்பேற்று, அவர்களை அவரவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, தலவாக்கலை- லிந்துலை நகரசபையின் தவிசாளர் அசோக சேபால தெரிவித்தார்.
திம்புள- பத்தனை, மஸ்கெலியாவைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்களால் உயர்தர தொழில்நுட்ப பாடத்துக்கான பிரத்தியேக வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான அனுமதியை லிந்துலை நகரசபையிலும் பெற்றுள்ளனர்.
எனினும் கொரோனா தொற்றால் பாடசாலை, பிரத்தியேக வகுப்புகளை மறு அறிவித்தல் வரை நடத்த வேண்டாமென, உத்தரவிடப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த வகுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், பொதுசுகாதார பரிசோதகர்களால் வகுப்பறைகளுக்கு சீல் வைக்கப்பட்டதுடன், ஆசிரியர்கள், 12 மாணவர்களை சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தவிசாளர் அசோக சேபால மேலும் தெரிவித்தார்.
7 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026