2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

ஆசிரியையின் தங்கச் சங்கிலி அபகரிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா, டி.கௌசல்யா

ஹட்டன், யுனி பீல்ட் தோட்டத்தில், ஆசிரியை ஒருவரின் தங்கச்சங்கியை அபகரித்துக்கொண்டுச் சென்ற இளைஞனைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி ஆசிரியையை நேற்று  காலை வழிமறித்த இளைஞரொருவர், கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளதுடன், தங்கச் சங்கிலியையும் அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்.

இது தொடர்பில் ஆசிரியை, உடனடியாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளதுடன், ஹட்டன் பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றுத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .