ஆ.ரமேஸ் / 2020 மே 20 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேயிலை மலைத் தோட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதிமிக்க ஆடு ஒன்றைக் கலவாடிய மாமன், மருமகன் ஆகிய இருவரையும் எதிர்வரும் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் பிரமோத் ஜெயசேகர, இன்று (20) உத்தரவிட்டார்.
கந்தப்பளை தேயிலை மலைத் தோட்டத்திலுள்ள போர்மலையான் கடவுளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு ஒன்றை ஒருவர் வளர்த்து வந்துள்ளார்.
எனினும், கந்தப்பளை, இராகலைப் பகுதியைச் சேர்ந்த மாமனும் மருமகனும் இந்த ஆட்டை, நேற்று (19) களவாடியுள்ளனர்.
இவ்வாறு களவாடிச் சென்ற ஆட்டை, தேயிலை மலைக் காட்டில் வெட்டி, அதன் இறைச்சியை விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையில், தனது ஆட்டைக் காணவில்லை என, ஆட்டுச் சொந்தக்காரர் கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் பொலிஸாரால் மேற்கொண்ட விசாரணையின் பின்னரே, மாமனும் மருமகனும் நேற்று (19) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து, ஆட்டுத் தலை உள்ளிட்ட ஆட்டுத் தோல், கத்திகள் ஆகியவற்றையும் ஒரு தொகை இறைச்சியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையிலேயே, இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
7 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026