2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ்

பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில், மாட்டுத்தொழுவத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆர்.ராமையா (வயது 65) என்பவர், இன்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன், ஆனைத்தோட்டத்தைச் சேர்ந்த நபரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபருக்கு,  இரண்டு ஆண் பிள்ளைகளும், விழிப்புலனற்ற ஒரு பெண் பிள்ளையும் உள்ளதாகவும், இவரது மனைவி கொழும்பில் தொழில்புரிந்து வருவதாகவும், ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருமணம் முடித்துள்ள இரண்டு ஆண் பிள்ளைகளும், குறித்த நபரை பராமரிக்காது கைவிட்ட நிலையில், மாட்டுத்தொழுவத்தில் நீண்டகாலமாக, குறித்த நபர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர், நேற்றுக் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாட்டுத்தொழுவத்தில், துர்நாற்றம் வருவதாக, பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கியத் தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், அழுகிய நிலையில் கிடந்த குறித்த நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

 பிரேத பரிசோதனைக்காக, நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .