Kogilavani / 2017 ஜூன் 29 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் ஹைலன்ட் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா தற்போது நடைபெற்று வருகின்றது. இவ்விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டுள்ள போதிலும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரான பா.திகாம்பரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் ஆகியோர் பங்கேற்கவில்லை.
கல்லூரி நிர்வாகத்தினால் அமைச்சர் திகாம்பரத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளபோதிலும் அவர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதேவேளை, கல்லூரியின் பழைய மாணவர் என்ற போதிலும் தனக்கு ஹைலன்ட் கல்லூரி நிர்வாகத்தினால் தனக்கு இதுவரை அழைப்புவிடுக்கப்படவில்லை” என்று, நுவரெலியா மாவட்ட எம்.பி திலகராஜ் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஹைலன்ட் கல்லூரியில், ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பளிக்கப்பட்டபோது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானே, ஜனாதிபதியை அழைத்துச் சென்றார்.
52 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago
4 hours ago