ஆ.ரமேஸ் / 2020 ஜூன் 09 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா பிரதேச சபைக்கு ஆதன வரிகளை செலுத்துவதற்காக, பிரதேச மக்களுக்கு சலுகை வழங்குவதாக, நுவரெலியா பிரதேச சபைத் தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடி காரணமாக, மார்ச் முதல் இன்று வரை, நாட்டின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இவ்வாறான நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் உள்ளூராட்சி சபைகளுக்கு மாதாந்தம் செலுத்தப்பட வேண்டிய வரி செலுத்தும் நடவடிக்கைகளுக்கு சலுகை வழங்கப்பட்டிருந்தது என்றும் கூறினார்.
அதனடிப்படையில் நுவரெலியா பிரதேச சபைக்கான அசையும், அசையா சொத்துகளுக்கான ஆதன வரிகளை, பொதுமக்கள் சபைக்கு செலுத்துவதில் தாமத தன்மை கடைபிடிக்கப்பட்டிருந்தது என்றும் தற்போது, மார்ச் முதல் தமது ஆதன வரிகளைச் செலுத்தாதவர்கள், கட்டம் கட்டமாக, வரிகளை செலுத்த முடியும் என்றும் அவர் கூறினர்.
அதேநேரத்தில், காலம் கடந்து செலுத்தப்படும் வரிகளுக்கு, தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என்ற சலுகையை, பிரதேச சபைக்கூட்டத்துக்கு சமூகமளித்துள்ள உறுப்பினர்களின் அனுமதியுடன், மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (09) முதல் வழங்குவதாகவும் அவர் கூறினார்.
இதனால், பிரதேச சபையின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படுகின்றமையால், செலவீனங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே பணம் செலவிடப்படும் என்றும் அவர் கூறினார்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago