Kogilavani / 2021 மார்ச் 22 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை மாவட்டத்தில், வீதி போக்குவரத்துக்கு ஆபத்தாக அமைந்துள்ள இடங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் சம்பந்தப்பட்டத் தரப்பினருக்குப் பணித்துள்ளார்.
பசறை – லுணுகலை பிரதான வீதி, 13ஆம் கட்டை பிரதேசத்தில், சனிக்கிழமை (20) இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே அவர் அதிகாரிகளுக்கு இவ்வாறு பணித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் சரிந்து வீழ்ந்துள்ள கல்லை உடனடியாக அங்கிருந்து அகற்றுமாறும், மாகாணத்துக்குள்ளே இதுபோன்று அபாயகரமான இடங்கள் காணப்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அவற்றுக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
அத்துடன் இந்த கோரச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் எதிராகவும் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் ஆளுநர் உத்தரவிட்டார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026