Sudharshini / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜ்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை மேற்பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு, ஆலய உண்டியலில் இருந்த பணம் மற்றும் அம்மன் கழுத்திலிருந்த தாலி உட்பட பல பொருட்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதென லிந்துலை பொலிஸ் நிலையத்தில் இன்று (13) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (12) இரவு மண்டலாபிஷேக பூசைகள் நிறைவுற்று அனைவரும் வீடுகளுக்கு சென்ற பின்னரே இவ்வாறு ஆலயம் உடைக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்று தொடர்ச்சியாக மண்டலாபிஷேக பூசைகள் நடைபெற்று வருகின்றது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
8 minute ago
20 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
32 minute ago