Kogilavani / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
ஆளனிப் பற்றாக்குறை மற்றும் பௌதிகவள பற்றாக்குறையுடன் இயங்கிவரும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கூடாக நோயாளர்களுக்கு தகுந்த சேவையை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி லியத்தபிட்டியஇ நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) தெரிவித்தார்.
இந்த வைத்தியசாலையானது கடந்த பல வருடங்களாக வைத்தியர்கள், தாதியர்கள், அம்பியூலன்ஸ் சாரதிகள் மற்றும் சிற்றூழியர்களின்றி இயங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'சாமிமலை பகுதியில் 30 தோட்டப் பிரிவுகள் உள்ளன. மஸ்கெலியா பகுதியில் 40 தோட்டங்கள், 3 நகரங்கள் 2 கிராமங்களுள்ளன. மேலும், சிவனொளிபாதமலை பருவகாலத்தின் போது வரும் சுமார் 2 இலட்சம் மக்கள் வருகை தருகின்றனர். இவர்கள் அனைவரும் வைத்தியத் தேவைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கே வருகின்றனர்.
'இவ் வைத்தியசாலையில் தற்போது 3 வைத்தியர்கள், 3 தாதியர்கள், அம்பியுலன்ஸ் வண்டி -1, சாரதி ஒருவர் மற்றும் சிற்றூழியர்கள் 6 பேர் கடமையாற்றி வருகின்றனர். இங்கு 3 மாடி கட்டடம், நோயாளர் தங்கி சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக 6 வார்ட்டுகள், வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, மகப்பேற்று பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு என பல பிரிவுகள் உள்ளப்போதிலும் இங்கு பணியாற்றுவதற்கு, 22 தாதியர்கள் (10 ஆண்கள்), 2 அம்பியூலன்ஸ் வண்டிகள், 3 சாரதிகள், 5 வைத்தியர்கள் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, நுவரெலியாவுக்கு வருகை தரும் மத்திய மாகாண சுகாதார அமைச்சர், மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைகளையும் நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
20 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
1 hours ago