2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

இடைக்கால கொடுப்பனவை வழங்க முடியாது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். செல்வராஜா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, இடைக்கால கொடுப்பனவாக வழங்கப்பட்ட 2,500 ரூபாவினை இம்மாதம் முதல் வழங்கமுடியாமல் இருப்பதாக, பதுளை மாவட்ட பெருந்தோட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளதாக  விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம். கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

அரசாங்கம் இவ்விடயத்தில் உடனடியாக தலையீடு செய்து, அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட இடைக்கால கொடுப்பனவான 2,500 ரூபாய் பணத்தை தொடர்ந்தும் வழங்க ஆவணஞ் செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து  மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,அரசாங்கத்தினால், வழங்கப்பட்ட இடைக்காலகொடுப்பனவான 2,500 ரூபாய் பணத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், தோட்ட முகாமைத்துவங்கள் அரசாங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தன. அதையடுத்து, தோட்டத் தொழிற்சங்கங்கள் விடுத்த அழுத்தங்களின் பேரில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பினால், அரச வங்கிகள் கடன் அடிப்படையில் கடந்த ஜூன், ஜுலை ஆகிய மாதங்களில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டது. 

ஆனால், அக்கொடுப்பனவைத் தொடர்ந்தும் வழங்க, தம்மால் இயலாதிருப்பதாக, தோட்ட முகாமையாளர்கள் அறிவித்துள்ளனர். அந்த வகையில், இம்மாதம்  மாதம் முதல் அக்கொடுப்பனவு நிறுத்தப்பட்டிருப்பதாக அறிய முடிகின்றது. 
இதனால், தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .