Janu / 2024 மே 30 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடரதல்ல தோட்ட தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் , வியாழக்கிழமை (30) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரும் இ.தொ.கா பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
"நுவரெலியா மாவட்டம் நானு ஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாட்டை கண்டித்து கடந்த ஒருமாத காலமாக பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேநேரத்தில் உடரதல்ல தோட்டத் தொழிலாளர்களுக்கும் அத் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்சினை தொழிற்சங்க பிரச்சினையாகும்.
இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள தொழிற் சங்கம்,தோட்ட நிர்வாகம் மற்றும் தொழில் திணைக்களம் இணைந்து தீர்வுகளை பெறவேண்டும் மாறாக தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சங்க பிரச்சினையில் பொலிஸார் தலையிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். " என குறிப்பிட்டுள்ளார் .
ஆ.ரமேஸ், செ.திவாகரன், டி.சந்ரு

4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago