2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

‘இம்மாத 18க்கு முன்னர் வழங்கவும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 07 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

எதிர்வரும்  தீபாவளியை திருநாளை  முன்னிட்டு, மலையக  பாடசாலை ஆசிரியர்கள், அரசாங்கத்தில் பணியாற்றும் சகல அரச தமிழ்  ஊழியர்களுக்கும், இம்மாத சம்பளத்தை எதிவரும் 18ஆம் திகதிக்கு முன்னர்   வழங்குமாறு,  இரத்தினபுரி மாவட்ட மலையக ஆசிரியர்கள், தமிழ் அரச பணியாளர்கள்  ஆகியோர்  கோரிக்கை விடுக்கின்றர்.
 

ஆசிரியர்களுக்கு வழமையாக 20ஆம்  திகதியும் அரச ஊழியர்களுக்கு வழமையாக 25ஆம் திகதியும் சம்பவம் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இம்மாதம் 18ஆம் திகதி, தீபாவளி வருகின்ற காரணத்தால், இம்மாதம் மட்டும்  சம்பளத்தை முன்கூட்டி வழங்குமாறும் தெரிவிக்கின்றனர்.

எனவே,  அரச தமிழ் பணிப்பாளர்களுக்கு 18ஆம் திகதிக்கு முன்னர் சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கும்  விடயம் குறித்து  அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தலைவர்கள் அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்குமாறும்,  இரத்தினபுரி மாவட்ட மலையக ஆசிரியர்கள், தமிழ் அரச பணியாளர்கள்  ஆகியோர் கோரிக்கை விடுக்கின்றர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .