Kogilavani / 2021 மார்ச் 24 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, துரிதகதியில் வீடுகளை நிர்மாணித்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபசெயலாளரும் பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில், கடந்த காலங்களில் இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீடுகள் இன்னும் புனரமைக்கப்படாதுள்ளதுடன் புதிய வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில், அதிலுள்ள சிக்கலைக் கண்டறிவதற்கு கண்டியில் கூட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சுற்றிக்கையை மாற்றியமைக்கவும் தோட்டப்புறங்களிலுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக வீடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அத்தோடு கண்டி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இந்திய வீடடைமப்பு மற்றும் அமைச்சின் வீடமைப்புகளுடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக மக்களுக்கான வீடுகளை துரித கதியில் பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வீடுகள் துரிதகதியில் மக்களைச் சென்றடையும் விதத்தில் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன என்றும் இது குறித்து அமைச்சர் சமல் ராஜபக்ஷவுடனும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுடனும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகள் எடுக்கப்படவுள்ளதாகவும் பாரத் அருள்சாமி மேலும் தெரிவித்தார்.
இந்த வீடுகளை அமைப்பதற்கு இராணுவத்தினரின் ஆதரவுகளும் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026