2026 ஜனவரி 21, புதன்கிழமை

இரண்டாம் மொழியை ஊக்குவிக்க நூல்கள் கையளிப்பு

Kogilavani   / 2021 ஏப்ரல் 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்தில் தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியை வலுவூட்டும் செயற்றிட்டத்தின் கீழ், ஒருதொகை சிங்களமொழிப்பாட நூல்கள், கட்டுகஸ்தோட்டைக் கல்வி வலயத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.

அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீனின் அனுசரணையில் இந்நூல்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது, தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன், கட்டுகஸ்தோட்டை வலய கல்விப் பணிப்பாளர் வை.எம்.எம்.கே.யாப்பாவிடம் ஒரு தொகை நூல்களைக் கையளித்தார்.

இந்நிகழ்வில், கட்டுகட்ஸ்தோட்டை கல்வி வலய தமிழ் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். ராசிக், தமிழ் சிங்கள இரண்டாம் மொழிக் கல்விப் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி நதீரா இஸ்மாயீல், பிரதி கல்விப் பணிபாளர் சுசிந்திரா திஸாநாயக;க, அஸ்டா கல்வி நிறுவனத்தின் பசான் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X