Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 25 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
பல்வேறு வகையான போதைப் பொருள்களுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைச் சென்ற 25 பேர் இரண்டு நாட்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினமும் (23) நேற்றும் (24) ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜித அல்விஸின் ஆலோசனைக்கமைய, ஏனைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் ஸ்டுவட் மோப்ப நாயின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் காலி, சிலாபம், மொனராகலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் அனைவரும் 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .