Gavitha / 2021 பெப்ரவரி 23 , பி.ப. 12:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
சன நெருக்கடியான பிரதேசங்களில், பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி, இரத்தினக்கல் அகழ்வு இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என, நீர்வளத்துறை அபிவிருத்தி அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டு மக்களுக்கு, சுத்தமான குடிநீரை வழங்குவதே, ஜனாதிபதியினரும் அரசாங்கத்தினதும் நாக்கமாகும் என்றும் எனவே, இதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சிக்கு அரசாங்கம் அங்கிகாரம் வழங்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இரத்தினக்கல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் பெற்றாலும் பெறாவிட்டாலும் பெக்கோ இயந்திரம் மூலம் இரத்தினக்கல் அகழ அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே, இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடுகளை செய்யுமாறும் அவ்வாறு ஏற்கெனவே பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago