Editorial / 2017 டிசெம்பர் 22 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
இரத்தினபுரி மாவட்டத்தில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு, 852,473 பேர் தகுதிபெற்றுள்ளனரென, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி மாலனி லொக்குபோத்தாகம கூறினார்.
இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் புதன்கிழமை (20) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் கூறிய அவர்,
“இரத்தினபுரி மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு, சுமார் 423 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இம்மாவட்டத்தில் பெண் உறுப்பினர்கள் 104 பேரும் வட்டார ரீதியாக நேரடி வேட்பாளர்களாக 258 பேரும், விகிதாசார முறைப்படி 165 பேரும் போட்டியிடவுள்ளனர்.
“17 உள்ளூராட்சி மன்றங்களுக்காகவும் கட்டுப்பணமாக, இம்மாவட்டத்தில் 23 இலட்சத்து எழுபது ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 660 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இயற்கை அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுக்கும் வகையில், சகல முன்னேற்பாடுகளும் செய்யப்படும்.
“புதிய முறையிலான தேர்தல் என்பதால் வாக்களிக்கும் இடத்திலேயே அல்லது அதற்கு அருகில் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களும் அமைக்கப்படும். இதனால் தேர்தலுக்கான ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாகவே தேவைப்படும்.
“தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்த, விசேட செயற்றிட்டம் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ளது.
“அத்துடன் மாவட்டச் செயகத்தில் மாவட்ட உதவிச் செயலாளர் தலைமையில் முறைப்பாட்டு மையம் அமைக்கப்படும்.
“இதனைத் தவிர எஹலியகொடை மற்றும் எம்பிலிப்பிட்டிய பகுதிகளில் முறைப்பாட்டு உப- மையங்கள் அமைக்கப்படும். “தேவை ஏற்படின் மேலதிக முறைப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்” என்றார்.
29 minute ago
41 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago
59 minute ago