R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
.ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்தும் ஊரடங்கு உத்தரவை மீறி, இரவு வேளையில் நடமாடுபவர்களை கைது செய்ய ஹட்டன் பொலிஸார் விசேட திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய திடீரென பல பகுதிகளில் இரவு வேளைகளில் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி இரவு பயணிக்கும் வாகனங்களையும் நபர்களை சோதனையிட்டு வருகின்றனர்.
நேற்று (28) இரவு முழுவதும் ஹட்டன் மல்லயைப்பூ சந்தி சோதனை சாவடியில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று இரவு முழுவதும் இடம்பெற்றன.
இதன் போது உரிய அனுமதி பத்திரமின்றி அத்தியவசிய தேவைகளுக்காக சென்றவர்களும். மற்றும் உரிய அனுமதி பத்திரமில்லாதவர்கள் கடுமையாக எச்சகரிக்கப்பட்டனர்.
இனிவரும் காலங்களில் அனுமதி பத்திரமின்றி பயணித்தால் அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த நடவடிக்கையின் போது ஹட்டன் பிரதேசத்துக்கு உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அனைத்து வாகனங்களும் இதன் போது சோதனையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago