R.Maheshwary / 2022 ஏப்ரல் 05 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
இராகலை பகுதியில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியிலும் அரசாங்கத்திற்கும்,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுக்கும் எதிராக பாரிய போராட்டம் ஒன்று, இன்று முன்னெடுக்கப்பட்டது.
இராகலை தபால் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான போராட்டம், பேரணியாக இராகலை முருகன் கோவில் வரை வந்தடைந்து.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் மலையக பங்காளி கட்சிகளின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என சுமார் நூற்றுக்கணக்கானவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு, ஜனாதிபதியின் செயற்பாடு ஆகியவற்றை கண்டித்து, கோசமிட்டும் பதாகைகளை ஏந்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
4 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
18 Jan 2026