2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

இராகலை நகரில் குடும்பஸ்தர் திடீர் மரணம்

Kogilavani   / 2020 நவம்பர் 08 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை நகரிலுள்ள தபால் நிலையத்துக்கு அருகில், 68 வயது குடும்பஸ்தர் ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்துள்ளார் என்று, இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இராகலை பகவலத்தைத் தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.வீரன் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இராகலை நகருக்கு, நேற்று (8) காலை 8 மணியளவில் வந்த குறித்த நபர், நகரிலுள்ள வங்கிக்கு அருகில் மயங்கி விழுந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர், உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும் குறித்த நபர் தான் நலமாக உள்ளதாகவும் பொருள்களை வாங்க வேண்டும் என்றுத்  தெரிவித்து மீண்டும் நகருக்குச் சென்றபோதே, நகரிலுள்ள தபால் நிலையத்துக்கு அருகில் மயங்கி விழுந்து உயிழந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில், இராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .