2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இளைஞர் முன்னணியின் மாநாடு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 10 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மலையக மக்கள் முன்னணியினது இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு, கொட்டகலை ஆலய மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (16) நடைபெறவுள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே.இராதாகிருஷ்ணன், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில், அமைச்சர் அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுர குமார திஸாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாலேந்திரன், ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளனர்.

மேலும், மலேசியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிவண்ணன், வெளிநாட்டு அரசியல்வாதிகள், கொரியா நாட்டின் இளைஞர் குழுவினர், அரசியல் பிரமுகர்கள், மலையக மக்கள் முன்னணியின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .