2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

இ.தொ.காவின் மகளிர் தின நிகழ்வு

Kogilavani   / 2021 மார்ச் 26 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வு, கொட்டக்கலை சி.எல்.எப் வளாகத்தில், நாளை(27) காலை இடம்பெறவுள்ளதாக காங்கிரஸின் மகளிர் பிரிவு  தெரிவித்துள்ளது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில், இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மகளிர் பிரிவு ஒழுங்கு செய்துள்ளது.

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளை பேணியே, பாரம்பரிய கலை, கலாசார விளையாட்டு மற்றும் பெண்களுக்கான விவாத போட்டியுடன் சிறப்பு அம்சங்கங்கள் கொண்ட நிகழ்வாக மகளிர் தின விழா நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X