Janu / 2024 மே 28 , பி.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் நாட்டு ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியின் தீடீர் மரணத்திற்கு நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு , திங்கட்கிழமை (27) நேரில் சென்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார் .
இதன்போது கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு சென்றிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஈரான் நாட்டுக்கான இலங்கை தூதுவரைச் சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்ததோடு, அங்கு விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டுள்ளார் .
மேலும் ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பலரின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் நாம் மிகுந்த மன வேதனையடைந்தோம் என்றும், விசேடமாக இலங்கைக்கும் எம்மோடு தொடர்புடைய பிராந்தியத்துக்கும் அவர்களின் இழப்பு பாரிய இழப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார் .
அத்தோடு ஈரானும், இலங்கையும் நெடுங்காலமாக நட்போடு திகழ்கின்றன. இலங்கையின் அபிவிருத்திக்கு கலாநிதி இப்ராஹிம் ரைசி அவர்கள் பல ஒத்துழைப்புகளை நல்கியுள்ளார். விசேடமாக உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு ஈரான் அரசாங்கம் நிதியுதவி வழங்கியது. இதை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம் என ஈரான் தூதுவரிடம் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் .
ஆ.ரமேஸ்


16 minute ago
24 minute ago
27 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
27 minute ago
29 minute ago