2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உடபுஸ்ஸலாவை நகரில் பஸ் தரிப்படம் அமைக்குமாறு கோரிக்கை

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

வலப்பனை பிரதேசசபைக்கு உட்பட்ட உடப்புஸ்ஸலாவை நகரில் பஸ் தரிப்பிடம் இதுவரை அமைக்கப்படாமல் இருப்பது பாரிய குறைப்பாடாக காணப்படுகிறது.

உடப்புஸ்ஸலாவை பிரதான நகரில் இருந்து வெளிமடை பிரதேசத்திற்கும் இராகலை வழியூடாக நுவரெலியா பிரதேசத்திற்கும் மட்டுமல்லாது வலப்பனை ஊடாக கண்டிக்கும் செல்ல முடியும்.

இவ்வாறான நிலையில் உடப்புஸ்ஸலாவை நகரிலிருந்து தூர பிரதேசங்களுக்கு பயணிப்பதற்கு தனியார் மற்றும் அரச பஸ்கள் சேவையில் ஈடுப்படுகின்ற போதிலும், இந்த நகரில் பஸ் தரிப்பிடம் இல்லை என்பது பாரிய குறைப்பாடாக காணப்படுகின்றது.

இதனால்  மழைக் காலங்களிலும் வெயில் காலத்திலும் நகரின் கடைகளை நம்பி பஸ்ஸுக்காக  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேச பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில், வலப்பனை பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டுவந்த போதிலும் பயன் கிட்டியதாக இல்லை.

எனவே வலப்பனை பிரதேச சபை உடனடியாக காலம் தாழ்த்தாது, பஸ் தரிப்பிடம் ஒன்றை  அமைத்து கொடுக்க முன்வர வேண்டுமென வேண்டுகோள்   விடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X