Kogilavani / 2021 மார்ச் 30 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே இரயில், நாவலப்பிட்டி ஜயசுந்தரவோவிட்ட பகுதியில், இன்று மதியம் 12.30 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
இதனால், மலையக ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இரயிலின் பின் எஞ்சினே தன்டவாளத்திலிருந்து தடம்புரண்டுள்ளதால் குறித்த எஞ்ஜின் பகுதி தவிர்ந்த ஏனைய ரயில் பெட்டிகள் நாவலப்பிட்டி இரயில் நிலையம் வரை சென்றுள்ளன.
தடம்புரண்டி பகுதியில் திருத்தப்பணி இடம்பெற்று வருவதாகவும் பணிகள் நிறைவடைந்தப் பின்னர் இரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரையில் மூன்று தடவைகள் குறித்த இடத்திலே இரயில் தடம்புரண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026