Editorial / 2020 மே 25 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஷ் கீர்த்திரத்ன
நெல், மரக்கறி, தேயிலைச் செய்கைகளுக்குத் தேவையான உரம் இன்மை காரணமாக, நாடளாவிய ரீதியில் செய்கையாளர்கள் பாரிய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்று, மாத்தளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரதன் தெரிவித்தார்.
மாத்தளை, கய்காவல பிரதேசத்தில், இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், மாத்தளை மாவட்ட விவசாயத் திணைக்களத்தால், ஒரு ஏக்கருக்கு 7 கிலோகிராம் யூரியா உரமும் 9 கிலோகிராம் மண் உரமுமே விநியோகிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
இந்த உரங்கள், ஏக்கர் கணக்கில் செய்கைபன்னப்படும் மிளகாய், பூசணிக்காய் போன்றவற்றுக்கு போதாது என்றும் அவர் தெரிவித்தார்.
உரங்களை இலவசமாக வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது பணத்துக்கேனும் உரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டத்தில், மஹாவலி வலயத்தில் மேற்கொள்ளப்படும் விவசாயச் செய்கைக்கு அமைவாக, ஒரு ஏக்கருக்கு 215 கிலோகிராம் யூரியா உரமும் 50 கிலோகிராம் டீ.எஸ்.பீயும், எம்.ஓ.பீ 55 கிலோவும் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
44 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
56 minute ago
1 hours ago