R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 21 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். குமார்
உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு போக முடியாத காரணத்தினால் பலாங்கொடை- வலேபொட தோட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வலேபொட தோட்ட கொழுந்து மடுவத்தில் கொழுந்து நிறுவையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
மயங்கி விழுந்தவரை மாரதென்ன தோட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மரண பரிசோதனையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
மயங்கி விழுந்தவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு, அத்தோட்டத்தில் வாகனங்கள் ஏதும் இருக்கவில்லை என்றும் நீண்ட நேரத்திற்குப் பின் தோட்ட நிர்வாக அதிகாரி ஒருவரின் வாகனத்திலயே மயங்கி விழுந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
. இதேவேளை, தாமதிக்காமல் வந்திருந்தால் உயிரை காப்பாற்ற முயற்சி செய்திருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
15 minute ago
42 minute ago
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
42 minute ago
20 Dec 2025
20 Dec 2025