Editorial / 2020 மே 12 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கொவிட்-19 பாதிப்பால் வீழ்ச்சியடைந்துள்ள எம்பிலிபிட்டிய, ஹம்பேகமுவ பிரதேச விவசாயிகளின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு, வியாபாரிகள் எவரும் முன்வராததால், தாம் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள், விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன .
தமது மரக்கறி, பழச் செய்கை உற்பத்திகளை கொள்வனவு செய்ய எவரும் வருகை தராமையால், தமது உற்பத்திகள் மரக்கறித் தோட்டங்களிலேயே பழுதடைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கொவிட்-19 பிரச்சினைக்கு முன்னர், தங்களிடமே பல வியாபாரிகள் வந்து மரக்கறி, பழவகைகளைக் கொள்வனவு செய்து வந்ததாகவும் இதன்மூலம் நியாயமான விலையில் நல்ல வருமானம் கிடைத்ததாகவும் எனினும் தற்போது தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
எனவே, தமது பொருளாதார நிலைமைகள் மிகவும் அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதற்காக அரசாங்கம் முடிந்தவரையில் தமக்கு மானியங்களை வழங்க வேண்டும் என, கோரிக்கை வீடுக்கப்பட்டுள்ளது.
14 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
59 minute ago
3 hours ago