2026 ஜனவரி 21, புதன்கிழமை

“உள்நாட்டு வாசனைப் பொருட்களில் விஷம் இல்லை”

Kogilavani   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்  

புத்தாண்டு காலத்தில்  உணவுகளை சுவையூட்டுவதற்காக  எவ்வித நச்சுத்தன்மையுமற்ற உள்நாட்டு  வாசனைப் பொருட்களை பயன்படுத்துமாறு, ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பீ.ஹீன்தெந்த தெரவித்தார்.

கண்டி பேராதனையில் அமைந்துள்ள ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,

“சந்தைகளில்  விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். அவற்றில் நச்சுத் தன்மை இருக்கலாம் என்பதே அவர்களது அச்சம். ஆனால், நமது நாட்டில் தயாரிக்கப்படும் வாசனைப் பொருட்கள் அவ்வாறு எவ்வித நச்சுத் தன்மையும் அற்றதாகும்.

“இயற்கையில் உற்பத்தியாகும் உள்நாட்டு வாசனைப் பொருட்களுக்கு பசளைகள்கூட மிகக் குறைவாகவே பயன்படுத்தப்டுகின்றன. அவை முற்றிலும் விசத்தன்மையற்றது, எனவே, இப் புத்தாண்டு காலத்தில், தமது வீடுகளில் தயாரிக்கும் உணவு வகைகளுக்கு எவ்வித அச்சமுமின்றி, தேசிய வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துமாறு  மக்களைக் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X