2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நாடளாவிய ரீதியில் இ.தொ.கா போட்டி

Sudharshini   / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற சபைகளுக்கான தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகம் உட்பட வடக்கு, கிழக்கு, தென்னிலங்கை என அனைத்து பகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவரும் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளருமான எஸ்.அருள்சாமி தெரிவித்துள்ளார்.

'உள்ளுராட்சி மன்றங்களுக்கும் அவற்றுக்கான தேர்தல்களும்' எனும் தலைப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெவிக்கையில்,

மலையக மக்கள் 'தேசிய இனம்' என்ற பதத்திற்கு நல்லாட்சி அரசாங்கம் வழிவகுத்துள்ளது. இதற்கு உதாரணம் அண்மையில் நடந்து முடிந்த சுதந்தி;ர தின விழாவில் தமிழ்மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமையாகும்.

மலையக மக்கள் காலம் காலமாக இ.தொ.கா வை நம்பியே வாழ்ந்தவர்கள், வாழ்ந்து வருபவர்கள். இது மலையத்திற்கு ஒரு முகவரியை ஏற்படுத்தியது மட்டுமல்லாது மலையக சமூகம் அரசியலிலே பங்கெடுத்துக்கொள்ளும் அளவுக்கு வழிகாட்டியது இ.தொ.கா என்பதை எவரும் மறுக்க முடியாது.

கடந்த கால உள்ளூராட்சி தேர்தல்களின் போது மூன்று பிரதேச சபைகளையும் இரண்டு நகரசபைகளையும் ஒரு மாநகர சபையையும் இ.தொ.கா தன்வசப்படுத்திருந்தமை ஒரு சிறப்பம்சமாகும். மாறிமாறி வரும் அரசாங்கங்கள் ஆட்சி அமைத்தாலும் இ.தொ.கா தனது தனித்துவத்திலிருந்து ஒருபோதும் மாறியதும் இல்லை. 

மாறப் போவதும் இல்லை. 2016ஆம் ஆண்டு புதிய அரசியல் அமைப்புக்கு அமைய உள்ளூராட்சிமன்ற தேர்தல் 70 சதவீதமும் தொகுதி முறைமை 30 சதவீதமும், விகிதாசார முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் இ.தொ.கா  நாடளாவிய ரீதியில் அங்கத்தவர்களை பெற்றுக் கொள்ளும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .