Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Sudharshini / 2015 நவம்பர் 16 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதானவின் வேண்டுகோளுக்கமைய, இலங்கை பத்திரிகை சங்கம், இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிர்வரும் 21ஆம் திகதி, செயலமர்வொன்றை நடத்துவதுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்படி செயலமர்வு (21) சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு இரத்தினபுரி 'சென்சூரியா' உல்லாசவிடுதியில் நடைபெறவுள்ளது.
'ஊடகவியலாளர்கள் நாட்டில்; நடக்கும் செய்திகளை எழுதும்போது அவர்களின் பொறுப்புக்கள்'; என்ற தலைப்பின் கீழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் ஆகியோர் இச்செயலமர்வை நடத்தவுள்ளனர்.
மேலும், இச்செலயமர்வில் கலந்துகொள்ளுமாறு இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு, இரத்தினபுரி மாவட்ட செயலகத்தின்; மூலம் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
2 hours ago