Janu / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட சமூக செயற்பாட்டாளர்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.
“ அவரின் கருத்து இலங்கை மின்சார சபையினதோ அல்லது அரசாங்கத்தினதோ, அமைச்சினதோ கருத்து அல்ல. அவர் வெளிப்படுத்திய கருத்துக்காக மன்னிப்பு கோருகின்றேன். ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார்” என்று எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் ஊடக பேச்சாளரின் கருத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான், வன்மையாகக் கண்டித்ததுடன், அது ஏற்றுக்கொள்ள முடியாதது என தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், இவர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் காஞ்சனவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர், ஊடகப்பேச்சாளர் பதவியில் இருந்து அவர் விலகிவிட்டதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் அறிவித்துள்ளார்.
11 minute ago
19 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
30 minute ago