Kogilavani / 2021 மார்ச் 29 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
மலையக மக்கள் முன்னணி, மலையகத் தொழிலாளர் முன்னணி மற்றும் ஏனைய அணி அமைப்புகளின் செயற்பாடுகளில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் வெளியேற்றப்பட்டிருந்தாலும் தொடர்ந்தும் தங்களுடைய செயற்பாடுகள் ஊவாவில் முன்னெடுக்கப்படும் என்று, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று (29) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், மிக விரைவில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், பதுளைக்கு விஜயம் செய்து அங்கிருக்கின்ற தங்களுடைய பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் என்றார்.
அனைவருடைய ஒத்துழைப்புடன் மலையக மக்கள் முன்னணி பதுளை மாவட்டத்தில், மறுசீரமைக்கப்படும் என்றார்.
பதுளை மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளைச் சேர்ந்த பலரும் தங்களுடன் இணைந்துச் செயற்படுவதற்கு கலந்துரையாடி வருவதாகவும் அவர்களையும் இணைத்துக் கொள்வதுத் தொடர்பாக முதலில் தங்களுடைய பதுளை மாவட்டத்தில் இருக்கின்ற உறுப்பினர்களுடன் கலந்தரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எக்காரணம் கொண்டும் பதுளை மாவட்டத்தில் உள்ள தங்களுடைய உறுப்பினர்களை கைவிடப்போவதில்லை என்றும் மலையக மக்கள் முன்னணி என்ற அமைப்பானது தனி நபர்களைச் சார்ந்த அமைப்பாக என்றுமே செயற்பட்டதில்லை என்றும் தெரிவித்தார்.
'மலையக மக்கள் முன்னணி தொடர்ந்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் இணைந்து பயணிக்கும். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ஆகியோருடைய ஒத்துழைப்புடன் ஊவாவில் நாங்கள் செயற்படுவோம்.
'எதிர்வருகின்ற தேர்தலில் நாங்கள் தமிழ் முற்போக்குக் கூட்டணியாக செயற்படுவோம். கூட்டணிக்கு நல்ல ஒரு பலம் இருக்கின்றது. மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கின்றது. எனவே தொடர்ந்தும் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணிப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை.
'இன்று இந்த அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை மக்கள் எதிர்வரும் தேர்தலில் வெளிக்காட்டுவார்கள். அதன் அடிப்படையில் நாங்கள் எதிர்காலத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
21 Jan 2026
21 Jan 2026