Kogilavani / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடுவதற்காகவும் ஊவா மாகாணத்தில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆய்வு செய்யவும் மாகாண சபை உறுப்பினர்களில் 32பேர், மேற்படி நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
இதற்காக மூன்று கோடியே அறுபது இலட்சம் ரூபாய், ஊவா மாகாண சபையின் நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இக்குழுவில் 20 பேர் நேற்று (27) பயணமாகியுள்ளதுடன் இரண்டாவது குழு, ஜனவரி மாதம் 2ஆம் வாரத்திலும் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
ஊவா மாகாண சபையின் 34 உறுப்பினர்களில், மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் இருவர் மட்டும் மேற்படி விஜயத்தில் பங்கேற்கவில்லை என அவர் மேலும் கூறினார்.
மக்களின் நிதியை வீண் விரயம் செய்யக்கூடாதென்றும் இவ்விஜயத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பெரும்தொகை நிதியை, ஊவா மாகாண மக்களின் நலனுக்காக பயன்படுத்தலாமென்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக, மாகாண சபையின் மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
இக்களவிஜயத்துக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago