2021 மே 08, சனிக்கிழமை

என்.சியுடன் இருவர் கைது

Kogilavani   / 2017 ஜூலை 20 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

என்.சி என்றழைக்கப்படும் போதைபொருளுடன் இருவரை, பொகவந்தலாவை நகரில் வைத்து புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ள பொலிஸார், அவர்களிடமிருந்து என்.சி போதைபொருளடங்கிய 25 குப்பிகளையும் கைபற்றியுள்ளனர்.

மேற்படி இருவரும் பொகவந்தலாவை நகரிலிருந்து பொகவந்தலாவை தோட்டத்துக்கு, மிகவும் சூட்டுமமான முறையில் போதைபொருளை கொண்டுச் செல்ல முற்பட்டபோதே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, மேற்படி பகுதியில் திடிர்சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தியபோதே, இருவரும் என்.சியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்விருவரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ள பொலிஸார், எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X