2026 ஜனவரி 21, புதன்கிழமை

ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு

Kogilavani   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இர.சுரேஸ்குமார்

ஹப்புத்தளை, தியத்தலாவை, பண்டாரவளை, எல்ல உள்ளிட்ட நகரங்களில், பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ஐந்து வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பண்டாரவளை பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நகரங்களிலுள்ள வியாபார நிலையங்களில், கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே, 5 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக, பொதுசுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X