2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

ஐந்து மாத்தில் 50 வீதி விபத்துக்கள்: ஐவர் உயிரிழப்பு

Kogilavani   / 2016 மே 06 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

ஹட்டன் பொலிஸ் பிரவுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து மாததுக்குள் சுமார் 50க்கு மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளாகவும் இவ்விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 50இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் கூறினர்.

மஸ்கெலியா, நோட்டன் பிரிட்ஜ், வட்டவளை, பொகவந்தலாவை, நோர்வூட், ஹட்டன், நல்லதண்ணி, கினிகத்தேனை ஆகிய பிரதேசங்களிலே இவ் விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

வெளி மாவட்டங்களிலிருந்து ஹட்டனுக்குள் பிரவேசித்த வாகனங்களே அதிகமாக விபத்துக்குள்ளாகியுள்ளன.
வாகன சாரதிகளின் கவனயீனம்;, நித்திரை, இயந்திர கோளாறு, வேகமாக வாகனத்தை செலுத்துதல் போன்ற  காரணங்களினாலே விபத்துக்கள் அதிகமாக சம்பவித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

மழை மற்றும் பனிமூட்டம் காரணமாகவும் இப்பகுதிகளில் வாகன விபத்துக்கள் அதிகம் நடைபெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .