2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

ஐம்பொன் விக்கிரங்கள் கையளிப்பு

Kogilavani   / 2021 மார்ச் 21 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

நுவரெலியா பிரதேசசபைக்கு உட்பட்ட நானுஓயா கெல்சி தோட்டம், மஹாஎலிய பிரிவிலுள்ள அம்மன் கோவிலுக்கு, நுவரெலியா பிரதேசசபை தவிசாளர் வேலு யோகராஜ், தனது சொந்த நிதியில், வள்ளி, தெய்வானை சமேதர முருகன் ஆகிய உற்சவ மூர்த்தி ஐம்பொன் விக்கிரகங்களை அன்பளிப்புச் செய்தார். 

கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் (20) நடைபெற்ற நிலையிலேயே,  மேற்படி விக்கிரகங்களை, கோவில் நிர்வாக சபைக்கு அவர் கையளித்தார்.

அத்துடன் மஹாஎலிய தோட்ட மக்களுடன் கலந்துரையாடி  மக்களின் தேவைகள், குறைகளைக் கேட்டறிந்துகொண்ட தவிசாளர், அவசரத் தேவையாக முன்மொழியப்பட்டிருந்த  கோவிலுக்கு அருகிலுள்ள பிரதான வடிகான் அமைப்பை முறையாக சீர்செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X