Editorial / 2023 ஒக்டோபர் 10 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
உடலுக்கு கடுமையான தீங்கை விளைவிக்கும் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இளைஞர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இருவரும் பெற்றசோ தோட்டத்தைச் சேர்ந்த 22 மற்றும் 25 வயதுகளை உடையவர்கள் என்றும் அவ்விருவரும் கொழும்பில் வேலைச் செய்பவர்கள் என்றும் விடுமுறையை எடுத்துக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
பெற்றசோ தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து இவ்விரு இளைஞர்களையும் சோதனைக்கு உட்படுத்திய போது, அவ்விருவிடமும் தலா 5 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொதிச்செய்யப்பட்டு இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இவ்விரு இளைஞர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

19 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
1 hours ago
1 hours ago