Kogilavani / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ ஏ.ஏம்.பாயிஸ்
சுமார் 23 வருடங்களுக்கு முன்னர், இரண்டு கொலைகள் மற்றும் பாரிய வன்முறைகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்த கசிப்பு, மதுபான வியாபாரம், இரத்தினபுரி வேவல்வத்தைத் தோட்டத்தில், மீண்டும் தலை தூக்கியுள்ளதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிராமப் பகுதிகளில் தயாரிக்கப்படும் கசிப்பு, மதுபானங்கள் என்பன, தோட்டப் பகுதி தரகர்களின் மூலமாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படுவதாகவும் இவற்றை அருந்துவோர், வீட்டு வன்முறைகளிலும் குடும்பச் சண்டைகளிலும் அதிகம் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 23 வருடங்களுக்கு முன், இப்பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு, கசிப்பு விவகாரமே காரணமாக அமைந்தது என உறுதிபடுத்தப்பட்டதாகவும் இவ்வாறான ஒரு சம்பவம் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டும் கல்வியலாளர்கள், மேற்படித் தோட்டத்தில் கசிப்பு உற்பத்தி, வியாபாரத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
8 hours ago