2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் நான்கு சிறுவர்கள் கைது

Sudharshini   / 2015 நவம்பர் 21 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் பகுதியில் கஞ்சாவுடன் நின்றிருந்த 4 சிறுவர்களை இன்று (21) பிற்பகல் கைதுசெய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்புக்கு  தொழிலுக்கு செல்ல தயாராக இருந்த நிலையிலே குறித்த நான்கு சிறுவர்களையும் ஹட்டன் பஸ் நிலையத்துக்கு அருகில்; வைத்து இவ்வாறு கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, குறித்த இடத்துக்கு சென்று பொலிஸார் சோதனையை மேற்கொண்டுள்ளனர். இதன்போதே குறித்த நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சா பக்கெட்டுகளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி நான்கு சிறுவர்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .