2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

கடந்த வருடம் பதுளை டிப்போவுக்கு கூடுதல் வருமானம்

Sudharshini   / 2016 ஜனவரி 06 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பதுளை டிப்போவுக்கு, கடந்த வருடம் மாத்திரம் நான்கு கோடியே பதினொரு இலட்சத்து எழுபத்து நான்காயிரத்து முந்நூற்று முப்பது  ரூபாய் (41,174,330)  இலாபம் கிடைத்துள்ளதென பதுளை டிப்போவின் பிரதி முகாமையாளர் டி.எம்.ஜயசேக்கர தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், 'பதுளை டிப்போவின் ஊடாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 103 பஸ்கள், தினமும் சேவைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன' என்றார்.

'பதுளை, ஹாலி-எல, பசறை, சொரணாதோட்ட, லுணுகலை, கந்தகெட்டிய மற்றும் தொலை
தூர சேவைகளுக்காக, தினமும் 103  பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் ஏனைய இடங்களிலுள்ள டிப்போக்களைப் போலன்றி, எமது பதுளை டிப்போவில் உரிய நேரத்தில் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு முறையாகவும் கிரமமாகவும் சம்பளம் வழங்கப்படுகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .