Gavitha / 2016 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி எசெல பெரஹெராவையொட்டி, கண்டி நகரப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, கண்டி மாநகரத்துக்குள் அழையும் கட்டாகாலி நாய்கள் அனைத்தையும் நகரத்துக்கும் அப்பால் கொண்டு சென்று விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொது, பெரஹெரா காலம் என்பதாலும் இதனைப் பார்வையிட வரும் வெளிநாட்டவர் மற்றும் உள்நாட்டவர்களுக்கு இடையூறாக இருக்கும் கட்டாகாலி நாய்களே இவ்வாறு வேறு பகுதிக்கு கொண்டு சென்று விடப்படவுள்ளதாகவும் கண்டி மாநாகர சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், ஸ்ரீ தலதா மாளிகை உள்ளிட்ட பெரஹெரா வலம் வரும் பகுதிகளிலுள்ள கட்டாகாலி நாய்கள், அரச சார்பற்ற நிறுவனத்தால் தொலுவை பகுதியில் நடத்தப்பட்டு வரும் நாய்களுக்கான மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, இதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
19 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
49 minute ago
1 hours ago