2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கண்டி மாணவனை காணவில்லை

Editorial   / 2024 ஓகஸ்ட் 13 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவன் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என மாணவனின் தாயார் கட்டுகஸ்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை ரணவன வீதியை சேர்ந்த மொஹமட் முகறத் முஜாஹித் என்ற மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டில் , தனது மகன், திங்கட்கிழமை  (12) பாடசாலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி  திங்கட்கிழமை (12) காலை 6.00 மணியளவில் வீட்டை விட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை எனவும் தாய் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X