Kogilavani / 2021 மார்ச் 16 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
நாவலப்பிட்டி கொலிகுரூப் தோட்டத்தில், நபரொருவர் தனது தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார் என்று நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்வபத்தில் மேற்படித் தோட்டத்தைச் சேர்ந்த சரவணமுத்து மகாமுனி (வயது 71) என்பவரே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
மதுபோதையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், மகன் தந்தையை கத்தியால் குத்தியுள்ளார் என்றும் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்த நிலையில், மகன் தப்பிஓடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், நாவலப்பிட்டி, குருந்துவத்தை பொலிஸார் ஈடுபட்டு வருவதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026