2026 ஜனவரி 21, புதன்கிழமை

கப்பம் விவகாரம்: பெண் உட்பட மூவர் கைது

Editorial   / 2021 ஏப்ரல் 10 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 

இரண்டு இலட்சம் ரூபாய், கப்பம் கேட்கப்பட்ட விவகாரம் தொடர்பில், பெண்ணொருவர் உட்பட மூவர், கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த மூவரில் அப்பெண்ணின் கணவனும் அடங்குகின்றார்.

 

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

​அக்குழுவின் பிரதான சந்தேக நபர், அளுத்கம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரிடம் இரண்டு இலட்சம் ரூபாயைக் கப்பமாக கேட்டுள்ளார். அதில், 50 ஆயிரம் ரூபாய், வங்கியொன்றில் வைப்பிடப்பட்டுள்ளது.

மிகுதி தொகையை, 50 ஆயிரம் ரூபாய் வீதம்,  வைப்புச் செய்வதற்கு இணக்கம் காணப்பட்டதென பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

எனினும், இவ்விடயம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X