Kogilavani / 2016 மே 02 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ
'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடுப்பதற்கு, தோட்டக் கம்பனிகளால் முடியாவிட்டால், தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படையுங்கள்' என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேஷன் தெரிவித்தார்.
தலவாக்கலை நகரில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினக்கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'கடந்த வருடம் 1,000 ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவதாக சிலர் கூறினார்கள். அதற்கு நாமும் ஆதரவளித்தோம். ஆனால் இன்றுவரை அவர்கள் கூறியது நடைமுறைக்கு வரவில்லை. ஒருவருட காலம் கடந்துள்ள நிலையில், இடைக்காலத் தீர்வாக 2,500 ரூபாயை, மாத சம்பளத்தில் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். அதை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், 2,500 ரூபாயை மாத சம்பளத்தில் அதிகரிக்குமாறு தோட்டக் கம்பனிகளுக்கு பணித்தது. எனினும் இதுவரை அதுவும் வழங்கப்படவில்லை' என்று அவர் கூறினார்.
'தமிழ் முற்போக்கு கூட்டணியின் சக்தியை வெளிக்கொண்டு வருவதற்கு பொறுமை இழந்தவர்களாக எதிர்வரும் 24 நாட்களுக்கான சம்பளத்தில் 2,500 ரூபாய் அதிகரிக்காவிட்டால், 25ஆம் திகதி மலையகம் தழுவிய பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவும் தயங்கமாட்டோம். இதனை, இந்த மே தினக் கூட்டத்தில் அரசாங்கத்துக்கும் தோட்ட கம்பனிகளுக்குமான எச்சரிக்கையாக விடுக்கின்றேன்' என்று கூறினார்.
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
31 minute ago
37 minute ago