Gavitha / 2021 மார்ச் 11 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
கருங்கல் உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, அரசாங்கத்தின் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி அபிவிருத்திப் பணிகளும் ஏனைய அபிவிருத்திப் பணிகளும் தாமதமடைந்து வருவதாக, முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.
இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பிரதேசத்தில், அதிகளவு கருங்கல் உற்பத்தி வேலைத்தளங்கள் காணப்படுவதுடன், இவற்றில் இருந்து நாட்டின் பல பகுதிகளுக்கும், கருங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கருங்கல் உற்பத்திக்கான அனுமதிப்பத்திரம், இதற்கான வெடிபொருள்கள், உபகரணங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
40 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
3 hours ago